தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர், உதவியாளர் உட்பட, 2,175 புதிய ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.


              இதற்கு, 'மின் வாரிய இணையதளத்தில், மார்ச், 2 முதல் விண்ணப்பிக்கலாம்' என, மின் வாரியம் ஏற்கனவே அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வசதி துவங்காததால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், 'தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; கட்டணம், கடைசி தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள், இணைய தளத்தில் தெரிவிக்கப்படும்' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022