தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள 2 தமிழாசிரியர் பணியிடங்கள், 1 ஓட்டுனர் பணியிடம், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




இந்த இடங்களுக்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை விண்ணப்பத்தில் ஒட்டி, பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித்தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய கையெழுத்துடன் இணைக்க வேண்டும். 

பின்னர் இந்த விண்ணப்பத்தினை வரும் 10ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, அஞ்சலிலோ இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412,   28190413 என்னும் தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)

RTI Letter Application - SG Asst 750 pp regarding