பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கப்பல் படையில் அதிகாரி பணி

 இந்திய கப்பற்படையின் Executive, Technical பிரிவுகளில் காலியாக உள்ள கமிஷன்டு ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி Commissioned Officer - Executive Branch (General Services,Hydro Cadre).

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
பணி: Commissioned Officers - Technical Branch (General Services)
A. Engineering (E) Branch:
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Marine, Automative, Mechatronics, Industrial of production, Metallurg, Aeronautica, Aerospace, BS Marine  போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
B. Electrical (L) Branch:
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics,Telecommunication, Instrumentation,Instrumentation and Control Engineering, Electronics and Instrumentation, Electronics and Communication, Power Engineering, Control system, Power Electronics போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதி்ப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Commissioned Officers - Technical Branch (Submarine Specialization)
A. Engineering Branch:
தகுதி: பொறியியல் துறையில் Mechanical,  Marine, Automative, Mechatronics, Industrial and Production, Metallurgy, Aeronautical, Aerospace, BG Marine Engineering, Instrumentation, Instrumentation and Control, Automation & Robotics, Industrial Engg - Management, Production Engineering போன்ற பிரிவுகளில் 55 சதவீத மப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
B. Electrical Branch
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics, Control, Telecommunication, Power Engineering, Electronics & Communication, Control system, Power Electronics போன்ற பிரிவுகளில் 55சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
உடற்தகுதி: ஆண்கள் 157 செ.மீ., உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். நல்ல பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1992 - 01.01.1997க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்தவராக இருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)
தேர்வு செய்யப்படும் முறை: பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்பி) நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மற்றும் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு, போபால், கோவை, விசாகப்பட்டினம்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.05.2016 முதல் 16.06.2016 வரை நடைபெறும்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஜனவரி 2017 முதல் கேரளா, எழிமலாவில் இந்தியன் நேவல் அகாடமியில் பயிற்சியளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டுடன் 10, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பி.இ. சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Post Box No:04,
Chankya Puri P.O.,
NEWDELHI- 110 021.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 18.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022