TNPSC VAO 2016 Expected cutoff Mark

VAO 2016 Exam - Expected cutoff Mark analysis from Ayakudi Coaching Centre.

A)பொது தமிழ் பகுதியில் 80 வினாக்களுக்கு 79 வினாக்கள் வரை சரியாக விடையளிக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான  கேள்விகள்  10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் இருந்தே வந்துள்ளது. பொது ஆங்கிலத்தை பொறுத்த வரையில்
பள்ளி பாடபுத்தகங்களை மேலோட்டமாக படித்தாலே குறைந்தது 77 வினாக்களுக்கு விடையளிக்கலாம். எனவே பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தை பொறுத்த அளவில் CUT OFF மதிப்பெண் 77.


B) கணித பகுதியை பொறுத்த வரையில் வினாக்கள் பெரும்பாலும் இதற்கு முன்னர் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாக இருந்ப்பதால் 20 வினாக்களுக்கு 17 வினாகள் வரை எளிதாக விடையளிக்கலாம். 

C) கிராம நிர்வாகம் பகுதியை பொறுத்த வரையில்  தெளிவாக படித்த அனைவரும் 25 வினாக்களுக்கு குறைந்தது 20 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். 

D) நடப்பு நிகழ்வுகளை பொறுத்த வரையில் 15 வினாக்களுக்கு 8 வினாக்கள்  எளிதில் விடையளிக்க முடியும். மேலும் கடந்த 1 வருடமாக தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் கிராமங்கள் மற்றும் நகரங்களில் படித்து வரும் அணைத்து தரப்பு தேர்வர்களும் நடப்பு நிகழ்வுகளில் சராசரியாக 8 வினாக்களுக்கு விடையளிக்கலாம். 

E) பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட 60 வினாக்களில் சராசரியாக 43 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். கீழ்க்கண்ட 15 வினாக்களுக்கு எளிதில் சரியாக விடையளிக்க இயலாது. 
       
                  1) largest Wind energy user    
                  (2) Largest rice producing countries    
                  (3) hazardous bio medical waste    
                  (4) Largest agro based industry    
                  (5) First Dolphin reserve community   
                  (6) The term of Jammu Kashmir legislative assembly   
                  (7) BLO means  
                  (8) Cave pillars   
                  (9) Ranji trophy scorer  
                  (10) Cashless country  
                  (11) RTI related assertion reason question  
          மேற்கண்ட வினாக்கள் தவிர Assertion Reason மாதிரியில்  கேட்கப்பட்ட இதர 2 வினாக்கள் மற்றும் "கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு"  என்ற மாதிரியில்  கேட்கப்பட்ட 2  வினாக்கள் உள்பட மொத்தம் 15 வினாக்கள் பொது அறிவு பகுதியில்  கடினமாக இருந்தது.   

மேற்கண்ட குறிப்புகளில் இருந்து - SECTIONWISE CUT OFF :

A) GENERAL TAMIL (OR) ENGLSIH - 77
B) APTITUDE - 17 
C) VILLAGE ADMINSTRATION - 20 
D) CURRENT AFFAIRS - 8
E) GENERAL KNOWLEDGE - 43

TOTAL -  77+17+20+8+43 = 165  என்று வைத்துகொள்வோம். 

SO  "165"  IS THE optimum  CUT OFF. 

CUT OFF மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இதர காரணிகள்:

1)  சென்ற வருடம் 148 வரை CUTOFF மதிப்பெண் இருந்தது. இரண்டாவது கட்ட கவுன்சிலிங்கில் 146 வரை இருந்தது. சென்ற வருடம் 2500 காலிபநியிடங்கள். ஆனால் இந்த வருடம் 891 மட்டுமே. 

2) பெண்களின் பங்கு - பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் குறைந்தது 450 பணியிடங்கள் வரை பெண்களால் மட்டுமே நிரப்படும் என்பது முக்கியமான ஒன்று. பெண்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டாலும் வேலைப்பளு காரணமாக VAO பணிக்கு விருப்பபட்டு செல்பவர்கள் குறைவு.

3) கிராமப்புற மாணவர்களின் பங்கு. - இந்த தேர்வு கிராமப்புற தேர்வர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நகர்புற தேர்வர்களை விட கிரம்மப்புற தேர்வர்களே பள்ளி பாடபுத்தகங்களை நன்றாக கரைத்து குடித்து படித்திருப்பார். பொது தமிழ் பகுதி CUT OFF மதிப்பெண்ணை அவர்களே முடிவு செய்கின்றனர் 

4) தமிழ் மீடியம் படித்த தேர்வர்களின் பங்கு: - பொதுவாக ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் ஓரளவிற்கு வசதி படைத்தவர்களாக இருப்பார். அவர்கள் VAO தேர்வு எழுதுவது மிக அரிது. எனவே தமிழ் மீடியம் படித்த தேர்வர்களின் பங்கு இந்த தேர்வில் அதிகம் இருக்கும். 

5) எனவே OPTIMUM  CUT OFF 165 ஆக இருக்கும். பொதுவாக 165- வினாக்களுக்கு மேல் சரியான விடை எழுதியவர்கள் மிகவும் தைரியமாக இருக்கலாம். 

6) ஆனால் இரண்டாவது மூன்றாவது நான்கவாது கட்ட கவுன்சிலின் வரும்பொழுது CUT OFF மதிப்பெண் 160 வரை குறைவதற்கு வாய்ப்புள்ளது.  

7) மேலும் இந்த தேர்வில் முதல் 2000 ரேங்க் எடுக்கும் தேர்வர்கள் GROUP 2, GROUP 2A, PG TRB போன்ற தேர்வுகளில் பணிக்கு சென்று விடும் வாய்ப்பு  உள்ளதாலும், எதிர்வரும் GROUP 4 தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சென்று விடும் காரணத்தினாலும் CUTOFF மதிப்பெண்  இரண்டாவது மூன்றாவது நான்கவாது கட்ட கவுன்சிலின் வரும்பொழுது 160 வரை கண்டிப்பாக குறையும். 
CUT OFF - for Male Candidates
BC - 165 and above 
BCM - 162 and above
MBC - 163 and above 
SC - 161 and above 
ST - 160 and above 

CUT OFF - for female candidates 
BC - FEMALE - 162
MBC FEMALE - 160
SC FEMALE - 159
ST FEMALE - 157

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022