பார்ம் 16 பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

சென்னை: இந்த இயந்திர வாழ்க்கை முறையில், இன்றைய இளைஞர்கள் பலரும் சிறந்த வாய்ப்புகளை நோக்கியும், சிறப்பான ஊக்கத் தொகை, ஊதியத்தை நோக்கியும் வேகமாக ஒடி வருகின்றனர். அதிக ஊதித்தை தேடி இவர்கள் அடிக்கடி தான் பணிபுரியம் நிறுவனங்களை மாற்றி வருகின்றனர். மாத ஊதியத்தில் வேலைக்குச் செல்பவர்கள் தங்களுடைய வரியை
செலுத்தும் போது பயன்படுத்தும் முக்கியமான படிவம் தான் படிவம் 16 (Form 16). வருமான வரி செலுத்தும் போது சில நேரங்களில், அவர்கள் தங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இந்தக் கட்டுரையின் மூலம் பார்ம் 16-ஐ பற்றிய 10 விஷயங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.


பார்ம் 16 என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் படிவம் தான் பார்ம் 16. இந்தச் சான்றிதழில் அந்தப் பணியாளர் சம்பாதித்த ஊதியம் மற்றும் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி ஆகியவை பற்றிய அனைத்து விபரங்களும் இருக்கும்.

நிறுவன மாற்றம் 

ஒருவர் தன்னுடைய வேலையை வேறு நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டால், அவர் தன்னுடைய முந்தைய நிறுவனம் மற்றும் தற்போதைய நிறுவனம் ஆகிய இரண்டிடம் இருந்தும் படிவம் 16-ஐ ஆண்டின் முடிவில் பெற வேண்டும். இந்த 2 படிவங்களின் உதவியுடன் தான் அவர் அந்த ஆண்டுக்கான வரியை செலுத்த முடியும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட படிவங்கள் 

ஒரு தனிநபர் வேறு வேலைக்குச் சென்றாலோ அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் வேலை செய்து வந்தாலோ அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட படிவம் 16-ஐ பெற முடியும்.

வருமான வரி 

உங்களுடைய ஊதியம் குறைந்தபட்ச வரி செலுத்தும் அளவை விடக் குறைவாக இருந்தால், ஊதியத்திலிருந்து வரி நேரடியாகப் பிடித்தம் செய்யப்படாத காரணத்தால் சான்றிதழ் எதுவும் தரப்படாது.

வருமான படிவம் 

உங்களுடைய நிறுவனத்தினர் படிவம் 16-ஐ கொடுக்காத பட்சத்தில், அவர்கள் கொடுக்கும் சேலரி ஸ்லிப்பில் இருக்கும் விபரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

பல தகவல்கள் 

மொத்த வருமானம், மேல் வருமானம், பல்வேறு சலுகைகள் மற்றும் பிடித்தங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் படிவம் 16 கொண்டிருக்கும்.

வரி கணக்கீடு

 நீங்கள் ஒரே நிதியாண்டில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், அந்த இரண்டு நிறுவனங்களிலிருந்தும் நீங்கள் பெற்ற வருமானத்தை மொத்தமாகக் கூட்டி கணக்கிட்டு, உங்களுக்கான வரியை செலுத்த வேண்டும்.

இப்படியும் செய்யலாம்.. 

வரிப் பிடித்தம் எதுவும் இல்லை என்பது போன்று, ஏதாவதொரு காரணத்திற்காக முந்தைய நிறுவனம் படிவம் 16-ஐ கொடுக்க இயலாத போது, உங்களுடைய சேலரி ஸ்லிப்-ஐயும் மற்றும் புதிய நிறுவனத்திலிருந்து பெற்ற படிவம் 16-ம் கொண்டு வரிச் செலுத்தலாம்.

வருமான வரி செலுத்துதல்

 உங்களுடைய முந்தைய நிறுவனத்தினரின் படிவம் 16-ஐ தற்போதைய நிறுவனத்தினரிடம் நீங்கள் கொடுக்க விரும்பாவிட்டால், இரு நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற படிவம் 16 குறிப்பைப் பயன்படுத்தி வரிச் செலுத்தலாம்.

பான் எண் படிவம் 16-ல் வேலை கொடுத்த நிறுவனத்தின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)