ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.


         பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:


* பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.
*பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவின்போது சலுகைகள் பெறலாம்.
*முழுமையான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
*ரயில் பந்து பத்திரிகை மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்படும்.
* அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்குஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
* டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
* சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் பார் கோடு வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகள்வழங்கப்படும்.
* ஆஜ்மீர், அமிர்தசரஸ், கயா, மதுரா, நான்டெட், புரி, திருப்பதி, வாரணாசி, நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படும்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.

சில சலுகைகள்:
*வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
*இ-கேட்டரிங் சேவை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
*பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
* குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
*ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனைசெய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
* மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
* முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
*வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் வசதிக்காக:
1. பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
2. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக நீண்டதூரம் செல்லும் அந்தோதயா ரயில்கள் இயக்கப்படும்.
*மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் அகல ரயில் பாதை அமைக்கப்படும்.
* இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களிலும்; அடுத்த ஆண்டில்400 ரயில் நிலையங்களிலும் வைபை சேவை வழங்கப்படும்.
* 2016-17-ல் 2000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.
*மாநிலங்களுடன் இணைந்து ரயில்வே செயல்திட்டங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 17 மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.
* அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
* ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
*இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
* ரூ.40,000 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
*ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம்கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
* ரயில்வே வாரியத்தில் பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் மூலம் காலிப் பணிகளை நிரப்புவதை பின்பற்றுகிறோம்.
*நாட்டின் பிற பகுதிகளுடன் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* டெல்லி - சென்னை இடையே புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இதே போல் காரக்பூர் - மும்பை - விஜயவாடா இடையேயும் புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.
*அடுத்த ஆண்டில் புதிதாக 2,800 கி.மீ தூரம் கொண்ட புதியரயில்வே இருப்புப் பாதைகள் திறக்கப்படும்.
*2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
* 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.
* ரயில்வே துறையின் வெற்றிப்பயணத்துக்கு அதன் ஊழியர்கள் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
*இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
*ரயில்வே பட்ஜெட் பிரதமர் மோடியின் கனவை நனவாக்குவதாக இருக்கும். ரயில்வே துறையை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் முதுகெலும்பாக்குவேன் என பிரதமர்கூறியிருந்தார். அதற்கேற்ப பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

11.32 am:மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இந்த பட்ஜெட் அமையும் என நம்புகிறேன்: சுரேஷ் பிரபு

11.30 am:நாட்டு மக்களின் தேவைகள், எதிர்ப்பார்ப்புகளை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

11.20 am:இன்று தாக்கலாகும் ரயில் பட்ஜெட் தேச நலனை பேணுவதாக இருக்கும்: வெங்கய்ய நாயுடு

11.10 am:ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இணை அமைச்சர்மனோஜ் சின்ஹா ரயில் பவனுக்கு வந்தடைந்தனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)