பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை
பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அதன் விவரம்:
* பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
* முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், 'ஹால் டிக்கெட்'டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்
* பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்
* இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்
* மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும்
* நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும்
* ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம்
* முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும்
* ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர்
* இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும்; 1:15 மணிக்கு தேர்வு முடியும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.