சம்பள உயர்வு குறித்து பேச 7 பேர் குழு அமைப்பு
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு
ஆண்டுகளுக்கு ஒரு முறை, சம்பளம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2015 டிச., 1 முதல், புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூ., - காங்., உள்ளிட்ட, 16 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.மேலும், மின் வாரிய நிதி, மின் பகிர்மானம், மின் உற்பத்தி பிரிவு இயக்குனர்கள், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குனர், செயலர், தலைமை பொறியாளர் - பெர்சனல், தலைமை நிதி அலுவலர் ஆகியோர் அடங்கிய, ஏழு பேர் குழுவை மின் வாரியம் நியமித்துள்ளது.எத்தனை பேர்? : தமிழ்நாடு மின் வாரியத்தில், கள உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர்என, 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.சம்பள உயர்வு வழங்க வேண்டிய காலக்கெடு முடிந்த பின் தான், பேச்சு நடத்தவே குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சு நடத்தி, சம்பளம் உயர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட வேண்டும்.சுப்ரமணியம், பொதுச் செயலர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-