ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!

வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!

இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து
உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 தாலுகா அலுவலகங்களில்,3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர் மாற்றம்,தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன.
விளை நிலங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையிலும், வீட்டுமனைகளை உட்பிரிவுகளாக பிரிக்க, நில அளவையர் (சர்வேயர்) பரிந்துரையிலும், தாசில்தாரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பட்டா பெயர் மாற்ற வரும் விண்ணப்பதாரரை, வருவாய் துறைஅதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும்; குறித்த நேரத்திற்குள் பெயர் மாற்றுவதில்லை எனவும், பெயரை மாற்ற பணம் கேட்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இன்று முதல்...இதை தவிர்க்க, மாவட்ட வருவாய் துறை, இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக, நஞ்சை, புஞ்சை நிலங்களின் வகையினங்களை, 'அ' பதிவேட்டில் இருந்து, இணையதளத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், பதிவேற்றம் செய்து வருகின்றனர்.இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததால், இன்றிலிருந்து, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய,வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும்திட்டத்தை, முதற்கட்டமாக, உத்திரமேரூர் தாலுகாவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அங்கு, கணினி சான்றுகள் அளிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடக்கின்றன.அடுத்ததாக, வாலாஜாபாத் தாலுகாவில், இன்றிலிருந்து இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகளை துவக்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.
'விரிவுபத்தப்படும்'
மாவட்டம் முழுவதும், இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால், வருவாய் துறை சான்றுகள் பெறுவது போல், பட்டா பெயர் மாற்றமும் எளிமையாகிவிடும். இதனால், வருவாய் துறை அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)