முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்ஒரே பாடப்பிரிவுக்கு அதிக வாய்ப்பு
அரசு பள்ளிகளில், 1,062 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில், ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
பதவி உயர்வில்...அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் காலியிடங்களில், 50 சதவீதம் பதவி உயர்வின் மூலமும்; 50 சதவீதம் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். இதன்படி, தமிழகத்தில், 2016 - -17ல், 1,062 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக, 2002 - 2008க்குள் பணியில் சேர்ந்து, முதுகலை பட்டப்படிப்பு முடித்த பட்ட தாரி ஆசிரியர்களின் தகுதி விவரம் சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 'கிராஸ் மேஜர்' என்ற வகையில், இளங்கலையில் ஒரு பாடப்பிரிவிலும், முதுகலையில் மற்றொரு பாடப்பிரிவிலும் பட்டம் பெற்றவர்களுக்கு, 1:3 என்ற விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
சந்தேகமேஇதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரண்டு ஆண்டு களாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நேரடி தேர்வு நடக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை உத்தரவில், 1,062 பேருக்கு வேலைவாய்ப்பு என குறிப்பிட்டிருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லாருக்கும் பதவி உயர்வு கிடைப்பது சந்தேகமே' என்றார்.