வெளிநாட்டு மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து படிக்கும் வகையில், அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தியாவில், 18 இடங்களில் ஐ.ஐ.டி.,என்கிற இந்திய தொழில்நுட்ப கழகம், செயல்பட்டு வருகிறது இதில், மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, ஐ.ஐ.டி.,யில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், வெளிநாடுகளை சேர்ந்த மற்ற மாணவர்களும், ஐ.ஐ.டி.,யில் சேர வசதியாக, அவர்களுக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம், சர்வதேச அளவில் ஐ.ஐ.டி.,க்களின் மதிப்பு உயரும் என, அரசு கருதுகிறது.

இதுபற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
*பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எதியோப்பியா ஆகிய நாடுகளின், வெளியுறவு அமைச்சகங்களின், உயர் அதிகாரிகள் கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், ஐ.ஐ.டி., யில், வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க, தனி நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது
*வெளியுறவு அமைச்கம் சார்பில், இந்த தேர்வுக்கான அமைப்பாக, ஐ.சி.சி.ஆர்., என்கிற இந்திய கலாசார உறவுளுக்கான கவுன்சில் செயல்படும்
*மும்பை, ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காஹரிடம், வெளிநாட்டு மாணவர்களுக்கு, ஜே.ஈ.ஈ., மற்றும் 'கேட்' தேர்வு நடத்துவதற்கான திட்டத்தை தயாரிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது
*வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவு தேர்வை, ஐ.ஐ.டி.,யும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய துாதரகமும் மேற்பார்வையிடும்
*வெளிநாட்டு மாணவர்களை சேர்த்து கொள்வதால், ஐ.ஐ.டி.,யில் இந்திய மாணவர்களுக்கான இடங்கள் சிறிதும் குறைக்ககப்படமாட்டாது. அவர்களுக்கு என்று கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்
*இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
*ஐ.ஐ.டி.,யில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் சேரும், வெளிநாட்டு மாணவர்களுக்கு, ஒரு ஆண்டு விசா வழங்காமல், படிப்பு முடியும் வரை, மொத்தமாக விசா வழங்கவும் வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. *வெளிநாட்டு மாணவர்கள், நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்காக, தனி வலைதளம் உருவாக்கப்படும். அதில், பாடம் உட்பட அனைத்து விவரங்களும், இடம் பெற்றிருக்கும். அடுத்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)