விண்வெளி சட்டங்களாவது காப்பாற்றப்படுகின்றனவா.?
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதாரமாய் 1957-இல் உலகின் முதல் செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தப்பட்டப்பின் விண்வெளி சட்டங்கள் உருவாக்கம் பெற்றன.
அப்படியாக பல சர்வதேச மரபுகள் மற்றும் ஒப்பந்தங்களால் ஈர்க்கப்பட்டு உருவாகிய விண்வெளி சட்டங்களை (Space Laws), விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடும் உலக நாடும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிற்று. அப்படியான மிக முக்கியமான 10 விண்வெளி சட்டங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.
ஆனால் அந்த சட்டங்கள் பின்பற்றப்படுகின்றனவா..? முறையாக காப்பாற்றப்படுகின்றனவா.?? என்பது மேலே போனவர்களுக்கே வெளிச்சம்..!
சட்டம் 01 :
பூமியின் தரையை போலவே விண்வெளியும் பொதுவான ஒரு பகுதியாகும், அதை ஆராய அனைவருக்கும் உரிமை உண்டு.
சட்டம் 02 :
சந்திரன் மற்றும் பிற விண்ணுலக பொருள்கள் அனைத்துமே சமாதான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சட்டம் 03 :
அணு ஆயுதங்களை விண்வெளி சுற்றுப்பாதைக்குள் செலுத்த, விண்வெளியில் ராணுவத்தளம் அமைக்க எந்தவொரு உலக நாடுகளுக்கும் உரிமை இல்லை.
சட்டம் 04 :
எந்தவொரு நாடும் விண்வெளியில் உள்ள எந்தவொரு நிலப்பகுதியையும் உரிமைக்கோர முடியாது.
சட்டம் 05 :
'சந்திரன் ஒப்பந்தம்' படி, எந்தவொரு நாடும் நிலவை சொந்த விண்வெளி கிரகமென உரிமை கோர முடியாது.
சட்டம் 06 :
விண்வெளிக்குள் செலுத்தப்படும் அத்துனை பொருட்களையும் பதிவு செய்வது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.
சட்டம் 07 :
ஒருவேளை விண்வெளியில் விபத்து நிகழ்ந்தால், அந்தந்த நாடுகள் தான் அதற்கு பொறுப்பேற்க்க வேண்டும்.
சட்டம் 08 :
பிறநாட்டு விண்பொருட்களை சேதப்படுத்தினால், சேதப்படுத்திய நாடு தான் அதை சரிகட்ட வேண்டும்.
சட்டம் 09 :
விண்வெளியை யாரும் மாசுபடுத்தக்கூடாது.
சட்டம் 10 :
விண்வெளியில் துயரப்படும் வீரர்களை காப்பாற்றவும், மீட்டு கொண்டு வரவும் அந்தந்த
நாடுகள் உடனடியாக நடவடிக்கைகாளை எடுக்க வேண்டும்.