'வாட்ஸ்ஆப் ஸ்காம்' ஆப்பு வைக்குமாம், பாத்துக்கோங்க மக்களே.!!

ஒரு சேவை மக்களுக்கு உபயோகமாக இருந்து அதை மக்கள் வரவேற்றால் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவதொரு ஆபத்து காத்திருக்கின்றது என்பதை நிரூபிக்கின்றது வாட்ஸ்ஆப் ஸ்காம், அதாவது வாட்ஸ்ஆப் ஊழல்.



அது என்ன ஊழல்.? உலகெங்கும் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் போலி குறுந்தகவல் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவது, வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு கேடு விளைவிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவதே வாட்ஸ்ஆப் ஊழல் ஆகும்.


புதிய ஊழல்


அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் மக்களை ஏமாற்ற காத்திருக்கின்றது புதிய ஊழல் ஒன்று. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.

லின்க்


அதன்படி புதிய ஊழலானது உங்களது நண்பர்கள் அனுப்பும் குறுந்தகவல்களில் ஒன்றாக உங்களுக்கு கிடைக்கும், குறிப்பிட்ட குறுந்தகவலில் போலி இணையதளத்தை இயக்கும் லின்க் ஒன்றும் இடம் பெற்றிருக்கும்.
க்ளிக்

க்ளிக்


ஒரு வேலை அந்த லின்கினை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட இணையம் ஓபன் ஆவதோடு அதில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டு உங்களது தனிப்பட்ட தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்படும்.
மால்வேர்

மால்வேர்


இதை அறியாமல் தனிப்பட்ட தகவல்களை வழங்கும் வாடிக்கையாளர்கள் போலியான இணையதளத்திற்கு செல்வதோடு கருவியை பாதிக்கும் மால்வேர்களும் போனினை பாழாக்கிவிடும்.
மொழி

மொழி


உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் வாட்ஸ்ஆப் ஊழல் இந்த செயலியில் வேகமாக பரவி வருவதாக பிரபல இண்டர்நெட் பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபாயம்

அபாயம்

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது இல்லாமல், மற்ற எந்த இணைய சேவையை பயன்படுத்தினாலும் அதிக சலுகை வழங்கும் சேவைகள் மற்றும் அறிமுகம் இல்லாத தளங்களையும் நம்பாமல் இருப்பது நல்லது. இதுபோன்ற சலுகைகளை நம்பி எவ்வித லின்க்களையும் க்ளிக் செய்யாமல் இருப்பதன் மூலம் வாட்ஸ்ஆப் ஊழலில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank