பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு
பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி களில், முதன் முறையாக, 2010ல், பங்கு
சந்தை குறித்த பாடம், 8ம் வகுப்பு, ௯ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. கணித பதிவியல் மற்றும் பொருளாதார பாட ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர்.
இந்த நிலையில், பங்கு சந்தை பாடத்துக்கு, தனியாக தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். தேசிய பங்கு சந்தை மைய அதிகாரிகள் மூலம், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வு எழுத, ஒவ்வொரு மாணவரும், 100 ரூபாய் கட்டணம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.