தமிழக தேர்தல் தேதி முடிவானது மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும்.

5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை தமிழக தேர்தல் தேதி முடிவானது : மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும்.

புதுடெல்லி: தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்துவது என்பதை டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. அதோடு, தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மத்திய போலீஸ் படை, துணை ராணுவம் அனுப்புவது ஆகியவை குறித்தும்
ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழக சட்டபேரவையின் பதவிக்காலம் வருகிற மே 22ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டிய பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. ஏற்கனவே பல கட்டமாக தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, அதிகாரிகள் தேர்தல் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளும் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 
வெளிமாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, பல கட்டங்களாக நடத்துவதா என்ற பரிசீலனையும் தேர்தல் ஆணையத்தின் வசம் உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கிடையில் தமிழகத்தோடு சேர்ந்து புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. 
தேர்தல்   தேதிகள் முடிவாகி விட்டதாக தெரிகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம். இந்தநிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை கமிஷனர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டன. 

அதில், குறிப்பாக தேர்தலில் வாக்களிக்க வரும் மாற்று திறனாளிகளுக்கு ஒட்டு சாவடியில் தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதையடுத்து மாநில தேர்தல்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள துணை ராணுவத்தினர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப எத்தனை துணை ராணுவ படையினரை வரவழைப்பது என்பது குறித்து முடிவு செய்து மத்திய அரசின் உள்துறை அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக மேற்கு வங்கம், அசாம் போன்ற நக்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழகத்திற்கு துணை ராணுவத்தினரை வரவழைப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி குறித்தும், நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்றும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ைஜதி ஆலோசனை நடத்துகிறார். இதை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி அல்லது முதல் வாரத்தில் தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்

டெல்லி செல்லும் முன் ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக ராஜஸ்தானில் இருந்து 15 ஆயிரமும், மகாராஷ்டிராவில் இருந்து 10 ஆயிரமும், பீகாரில் இருந்து 50 ஆயிரமும் வரவழைக்கப்பட உள்ளன. ஏற்கனவே 20 ஆயிரம் வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank