யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு) முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

இந்தத் தேர்வுகளின் முடிவுகள்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.




இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://upsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.

அங்கு ‘Written Result – Civil Services (Main) Examination. 2015 என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.



தேர்வில் தகுதி பெறாத மாணவர்கன் மதிப்பெண் விவரம் இணையதளத்தில் 15 நாள்களுக்கு இருக்கும்.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 3 மாதம் வரை அந்த முடிவுகள் இருக்கும். இதைத் தொடர்ந்து தனி நபர் திறன் தேர்வு மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

இது Dholpur House, Shahjahan Road, New Delhi – 110069 என்ற முகவரியில் நடைபெறும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 011-23385271 or 011-23381125 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)