ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை
' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இதுவரை, கடிதம் மூலம், நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி, இணைய தளம் மூலம், அழைப்புக் கடிதம் அனுப்ப, யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.நடப்பு ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு, மார்ச், 8ம் தேதி முதல் துவங்க உள்ளது.


என்ன செய்ய வேண்டும்?:நேர்முகத்தேர்வுக்கு இனிமேல், அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. மாறாக, தேர்வர்கள், மின்னணு முறையிலான அழைப்பாணையை, தேர்வாணையத்தின், www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.


அழைப்புக் கடிதத்தை, 'டவுண்லோடு' செய்ய முடியாவிட்டால், அதுபற்றி, உடனடியாகவோ அல்லது நேர்முகத் தேர்வுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்போ, தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)