ஆண்ட்ராய்டு ஆப் ஆபத்து : நீங்க சிக்கிடாதீங்க..!!
நம்மவர்களில் பெரும்பாலானோரை கெடுத்து வைத்திருக்கும் உன்னத வார்த்தை 'இலவசம்' தான். எங்காவது இலவசம் என்றால் உடனே அதில் கவனத்தை செலுத்த துவங்கி விடுகின்றோம். இலவசம் என்றால் எச்சரிக்கை அதிகம் தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண்ட்ராய்டில் இலவச அழைப்பு மேற்கொள்வது எப்படி..??
இன்றைய தேதியில் அதிகமான இலவசம் இணையத்தில் தான் கிடைக்கின்றது. இணையத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து தினமும் பல்வேறு செய்திகள் வெளியாகும் நிலையில் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் ஆப் மோசடி குறித்து விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
செயலி
அடல்ட் ப்ளேயர் எனும் செயலி தன் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தி வருகின்றது.
இலவசம்
அடல்ட் ப்ளேயர் பார்ன் செயலி இணையத்தில் இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத இந்த செயலி இலவசமாக கிடைக்கும் என்பதால் அதிகளவிலான வாடிக்கைாளர்கள் பதிவிறக்கம் செய்தனர்.
உரிமம்
இன்ஸ்டால் செய்யும் போது வாடிக்கையாளர்களின் தகவல்கள் உட்பட கருவியில் முன்பக்க கேமரா உள்ளதா என்பதையும் இந்த செயலி கண்டறியுமாம்.
புகைப்படம்
இந்த செயலியை இன்ஸ்டால் செய்த பின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது அவர்களுக்கு தெரியாமல் புகைப்படங்களை எடுத்து கொள்கின்றது.
ப்ளாக்
எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு உங்களது போனினை ப்ளாக் செய்து விடுகின்றது.
அச்சுறுத்தல்
கருவியை ப்ளாக் செய்த பின் டிஸ்ப்ளேவில் பாதுகாப்பிற்காக உங்களது கருவி ப்ளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை சரி செய்ய $500 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இது போன்று பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க உங்களுக்கு அறிமுகம் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். முடிந்த வரை ஏபிகே மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத செயலிகளை பிதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
ஆன்டிவைரஸ்
உங்களது ஸ்மார்ட்போனில் ஆன்டிவைரஸ் செயலியை இன்ஸ்டால் செய்வதோடு, அடிக்கடி செயலி அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.