மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்களை பதிவுசெய்ய, வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்கள் ப
திவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை செய்வோர், பெரும்பாலும் ஓரிடத்தில் இருந்துகொண்டு தகவல் சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடும்பங்களின் உண்மை நிலையை அறிந்து தகவல் சேகரிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
எனவே,மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.