மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
நிதி மந்திரி அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3–வது பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்
இந்தியில் கவிதை வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கினார் ஜெட்லி
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக உலக பொருளாதார அமைப்புகள் பாராட்டி உள்ளன.
* நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சத்வீதமாக உள்ளது
* அரசின் நடவடிக்கையால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது
* அரசின் வருமானத்தில் கணிசமான அளவு மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவு 350 மில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது.
* செலவு அதிகரித்துள்ள நிலையில் சமநிலையிலான பட்ஜெட் தயாரிக்கபட்டு உள்ளது.
* மூன்றில் ஒரு பங்கு மக்களுகு கிடைக்க கூடிய மருத்துவ காப்பீடு அறிமுகம்
* கிராமாப்புறம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிகம் செலவிட அரசு முன்னுரிமை