பொன்மகன் பொது வைப்பு நிதி அஞ்சலகத்தில் புது ஏற்பாடு
அத்தியாவசிய காலங்களில், 'பொன் மகன் பொது வைப்பு நிதி' சேமிப்பு கணக்கை, ஐந்து ஆண்டுகளில் முடித்து, வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பு:அஞ்சலகங்களில், ஆண் குழந்தைகளுக்காக, பிரத்யேகமாக, 'பொன் மகன் பொது வைப்பு நிதி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் தொகைக்கு, '80- சி' பிரிவில், வருமான வரி விலக்கு அளிக்கப்படும். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு, 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும்; வட்டிக்கு வரி விலக்கு உண்டு. ஆண்டுக்கு, 100 ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம்.இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம், 15 ஆண்டுகள். தற்போது, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் மருத்துவச் செலவிற்காக, அத்தியாவசிய காலங்களில், கணக்கு ஆரம்பித்த, ஐந்து ஆண்டுகளில், சேமிப்பு கணக்கை முடித்து பணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.