ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என கல்வித்துறை தெரிவிக்கிறது. அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசி
ரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதன்படி,தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 முதல் 2008க்குள் பணிக்கு சேர்ந்த அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை, முதுநிலைபட்டம் பெற்றவர்களுக்கு 1:1, வேறு பாடத்தில் (கிராஸ் மேஜர்) பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 1:3 என்ற அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்கபள்ளிக்கல்வித்துறை திட்ட மிட்டுள்ளது.
தமிழ் பாடத்திற்கு 2002--03 லும், ஆங்கி லத்திற்கு 2005--06 லும், அறிவியல் பாடங்களுக்கு 2007--08லும், கணிதத்திற்கு 2005--06லும், வரலாறுக்கு 2003--04 வரையிலும் உத்தேச பட்டியல் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் 50 சதவீத முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என, கல்வித்துறை தெரிவிக்கின்றது. அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டாக டி.ஆர். பி.,நேரடி தேர்வு நடக்கவில்லை.மொத்த காலியிடங்களில் பதவி உயர்வில் செல்வோரின் எண்ணிக்கை குறையும். அரசு உத்தரவில் 1,063 பேருக்கு வாய்ப்பு என குறிப்பிட்டு இருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லோருக்கும் பதவி உயர்வு கிடைப்பது அரிது,” என்றார்.