200 செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்கீழ் போபாலில் செயல்பட்டும் வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 200 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:ஸ்டாப் நர்ஸ்
காலியிடங்கள்: 200
வயதுவரம்பு:30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன், ஜெனரல் நர்சிங் மற்றும் மிட் வைப் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆண் செவிலியர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:www.aiimsbhopal.edu.in என்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:16.04.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:30.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)