பட்டதாரிகளுக்கு 270 உதவி கமாண்டன்ட் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் காலியாக உள்ள 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை 'சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2016' எனப்படும் இந்த தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி. வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:


பணி:பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.) - 28
பணி:சென்டிரல் ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எப்.) - 97
பணி:இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.) - 87
பணி:சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.) - 58

கல்வித்தகுதி:ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:01.08.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.08.1991 மற்றும் 01.08.1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்தவர்கள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்து தேர்வு, உடல் அளவுகள் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.200. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் பகுதி 1, பகுதி 2 என்ற இருநிலைகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:26.06.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:08.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)