பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்.

வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிமுகம்இன்றைய உலகச்சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்கும் வகையில்
பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.


தமிழகத்தில் 41 அரசு பாலிடெக் னிக்குகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் உட்பட 490-க் கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல் லூரிகள் இயங்கி வருகின்றன.பாலிடெக்னிக் பாடத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி யமைக்கப்படும். அந்த வகையில், முதல் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றி யமைக்கப்பட்டது. பாலிடெக்னிக் பாடத்திட்டத்துக்கு ஆங்கில வரிசைப்படி பெயர் கொடுப்பார்கள். அதன்படி, முந்தைய ‘எல்’ வரிசை பாடத்திட்டம், ‘எம்’ வரிசை பாடத்திட்டமாக மாறியது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில், முதல் ஆண்டு மாண வர்களுக்கான புதிய பாடத்திட் டத்தில், சமீபத்திய முன்னேற்றங் கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் தொடர்பான பாடங்கள் சேர்க்கப் பட்டன. உலகளவில் பிரபலமாகி வரும் நானோடெக்னாலஜி, ரோபாட் டிக்ஸ் உள்ளிட்ட பாடங்களும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிலிருந்து (2016-17) 2-ம்ஆண்டு மாணவர்களுக்கும் பாடத் திட்டம் மாற்றப்பட உள்ளது.இன் றைய உலகச்சூழலுக்கு ஏற்ப வேலை வாய்ப்புத்திறனை அதிகரிக் கவும், அவர்களை வேலைவாய்ப் புக்கு தகுதிபடைத்தவர்களாக மாற் றும் வகையிலும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக பாடத்திட்டத்தில் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பாடத்திட்டத் தில் மட்டுமின்றி கேள்வித்தாள் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது இருக்கும் 12 மதிப்பெண் வினாக்கள் நீக்கப்படும். கேள்விகளுக்கு அதிக பட்ச மதிப்பெண் 5 ஆக இருக்கும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:தொழில்நிறுவனங்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும்வகை யில் புதிய பாடத் திட்டம் தயாரிக் கப்பட்டுள்ளது. தற்போது புதிய முயற்சியாக நூலக நேரமும், கருத் தரங்க பங்கேற்பும் சேர்க்கப்படுகி றது. 

மாணவர்கள் வெறுமனே மனப் பாடம் சார்ந்து இருக்காமல் நன்கு யோசித்து சூழலுக்கு ஏற்ப தங்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய வர்களாக, எதையும் தைரியமு டன் சந்திக்கக்கூடியவர்களாக மாற் றும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கும்.கருத்தரங்க பங்கேற்பு திட்டம் மூலமாக அவர்கள் நூலகங்களுக் குச் சென்று குறிப்புகள் தயாரித்து சொந்தமாக உரையாற்றுவார்கள். ஒரு விஷயம் தொடர்பாக கருத்து களை எடுத்துரைப்பார்கள். 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பாடத்திட்டத்துக்கான வரைவு பாடத்திட்டங்களை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணை யதளத்தில் வெளியிட்டுள்ளோம். இதுதொடர்பான ஆலோசனை களை மார்ச் 27-ம்தேதிக்குள் தெரி விக்குமாறு அனைத்து பாலிடெக் னிக் கல்லூரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.2ம் ஆண்டு மாணவர் களுக்கான புதிய பாடத்திட்டம் (எம் வரிசை) வரும் கல்வி ஆண்டி லிருந்து (2016-17) அமல்படுத்தப் படும். இதற்கு அடுத்த கல்வி ஆண் டில் (2017-18) இந்த மாணவர்கள் 3-ம் ஆண்டுக்கு வரும்போது “எம்” வரிசையில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank