ஐஐடி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சமாக உயர்கிறது: 3 மடங்கு அதிகரிப்பு.

அடுத்த ஆண்டிலிருந்து புதிய நுழைவுத்தேர்வு கொண்டுவரவும் திட்டம்
ஐஐடி ஆண்டு கல்விக் கட் டணத்தை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐஐடி ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் அளித் துள்ளது. அதேபோல், ஐஐடி படிப் புக்கு அடுத்த ஆண்டிலிருந்து புதிய நுழைவுத்தேர்வு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

     இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, கான்பூர், கரக்பூர், குவஹாட்டி, ஹைதராபாத் உள்பட 23 இடங்களில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கல்லூரிகள் உள்ளன. ஐஐடி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பெரிய பெரிய நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அதிக ஊதியத் தில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது பிளஸ்-2 முடிக் கும் மாணவர்கள் பலரின் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. குறைந்த கல்விக் கட்டணம், உயர் தரத்தில் அடிப்படை வசதிகள், பன்முகச் சூழல் உள்ளிட்ட காரணங் களால் ஐஐடி-ssயில் சேர்ந்து படிக்க மாணவர்கள் பெரிதும் ஆசைப் படுகிறார்கள்.
ஐஐடி-யில் இளங்கலை பொறி யியல், தொழில்நுட்ப படிப்புகளில் சேர ஜெ.இ.இ. எனப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். தேசிய அளவில் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வில் மிகவும் திறமை வாய்ந்த மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள்.
இந்த சூழலில், ஐஐடி கல்லூரி களின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் மும்பை ஐஐடி இயக்குநர் திவாங் கக்கர் தலைமையில் ஒரு துணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தற்போதைய வருடாந்திர கல்விக் கட்டணத்தை ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதாவது 3 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
மத்திய அமைச்சகம் ஒப்புதலுக்காக..
இந்த பரிந்துரைக்கு ஐஐடி இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட ஐஐடி ஆட்சிமன்றக் குழுவின் நிலைக்குழு வியாழக் கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் கல்விக் கட்டண உயர்வுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போதுதான் கட்டண உயர்வை அமல்படுத்த முடியும். மேலும், ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அடுத்த ஆண்டு முதல் தேசிய ஆணைய தேர்வு என்ற புதிய நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் ஐஐடி ஆட்சிமன்றக் குழுவின் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கும் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஐஐடி ஆட்சிமன்றக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டால் ஐஐடியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 4 ஆயிரம் டாலரில் இருந்து 10 ஆயிரம் டாலராக உயர்த்தப்படும். ஐஐடி-யில் வருடாந்திர கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ் வட்டி மற்றும் பிணை சொத்து இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்றும் ஐஐடி ஆட்சிமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)