ஏப்.3-இல் மத்திய ஆயுத காவல்படைப்பணி தகுதித்தேர்வு.
மத்திய ஆயுத காவல் படையில்(இதடஊ) உதவி காவல் ஆய்வாளர்(ஸ்டெனோ)பணிக்கான தகுதித்தேர்வு ஏப்.3-ஆம் தேதிநடக்கவிருக்கிறது.இது குறித்து மத்திய ஆயுத காவல்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய ஆயுத காவல்படையில் காலியாக உள்ள 219 உதவி காவல் ஆய்வாளர்(ஸ்டெனோ)பணிக்கு ஆண்,பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்திந்திய அளவில் நேரடி இணையதளதேர்வு பெங்களூரு, எலஹங்காவில் உள்ள மத்திய ஆயுத காவல் படையின் குழு மையத்தின் கட்டுப்பாட்டில் ஏப்.3-ஆம் தேதிகாலை 10 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை நடக்கவுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுநுழைவுச்சீட்டு ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீழ்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தின் மூலம் நுழைவுச்சீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு நடக்கும் மையங்கள் வருமாறு:சேஷாத்ரிபுரம் முதனிலை கல்லூரி, அரசு முதனிலை கல்லூரி, எம்இசி கல்வி மையம், அக்ரகாமி வித்யாகேந்திரா, பிஎம்எஸ் பொறியியல் கல்லூரி,ஆர்.டி.நகர் தன்னாட்சி பியூ கல்லூரி(அனைத்து கல்லூரிகளும் எலஹங்கா பகுதியில் உள்ளன), சாய்வித்யா பொறியியல் கல்லூரி(ராஜனகுன்டே). இத்தேர்வை பெங்களூருவில் மொத்தம் 12,411 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.