நாளை கணினி அறிவியல் தேர்வு 4 வகை வினாத்தாள் தயாரிப்பு
பிளஸ் 2 தேர்வில் நாளை நடக்கவுள்ள கணினி அறிவியல் தேர்வில், நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.
பிளஸ் 2 தேர்வில், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நாளை கணினி அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. தேர்வில், 30 பக்கங்களுக்கு கோடில்லாத விடைத்தாள்கள் வழங்கப்படு
ம்.75 வினாக்களுக்கு...மேலும், ஒரு மதிப்பெண்ணில், 75 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். இதற்காக, 'ஆப்டிகல் மார்கிங் ரெகக்னிஷன்' என்ற, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், இதுபோன்ற வினாத்தாள்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:விடைத் தாள் களை சேதமடையாமல், தேர்வெழுத வேண்டும். விடைத்தாளின் முகப்பில் பெயர் மற்றும் பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விடைகளை குறிக்கும் கட்டங்களில் குறியீடு (ஷேட்) செய்ய, கறுப்பு பால்பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கையொப்பம் இடும்போது, அதற்குரிய கட்டத்தை தாண்டி, எழுத்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாள் சேதமடைந்திருந்தால், மாற்று ஓ.எம்.ஆர்., விடைத்தாள் பெற்று தேர்வெழுதலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
முறைகேடாக...இந்த தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் வகை வினாக்கள் என்பதால், விடையை சைகை மற்றும் எண் அடிப்படையில் மாணவர்கள் முறைகேடாக பகிர்ந்து கொள்ள முடியும். எனவே, அதை தடுக்க, நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. அருகருகில் இருக்கும் மாணவர்களுக்கு, இந்த வினாத்தாள்கள் ஒரே வகையாக இல்லாமல் மாற்றி வழங்கப்படஉள்ளது.