746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படுமா? - நிபுணர் குழு தலைமையில் ஆய்வு நடத்த முடிவு.

746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு தலைமையில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மெட்ரிகுலேஷன் தனி யார் பள்ளிகள் இயங்கி வரு கின்றன. இவற்றில் லட்சக்க ணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீ காரம் வழங்கப்பட்டு, ஆண்டுதோ றும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.


கல்வியாளர் சிட்டிபாபு குழு அளித்த பரிந்துரையின்படி, உள் கட்டமைப்பு வசதிகள், நிலம் தொடர்பாக புதிய விதிமுறைகளை நிர்ணயித்து தமிழக அரசு கடந்த 2004-ம் ஆண்டு ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, பள்ளி அமைந்திருக்கும் பகுதிக்கு ஏற்ப அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிலைக்கு ஏற்ப குறைந்தபட்ச நிலம் இருக்க வேண்டும்.ஆனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில், அரசு நிர்ணயித்துள்ளநிலப்பரப்பில் பள்ளி அமைப்பது என்பது இயலாத காரியம் என்று கூறி தனியார் பள்ளி நிர்வாகிகள் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், புதிய விதி முறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக் பள்ளிகளின் தற்கா லிக அங்கீகாரத்தை அரசு ரத்து செய்தது. அந்த பள்ளிகளில் ஏறத் தாழ 5 லட்சம் மாணவ-மாணவி கள் படிக்கின்றனர் என்பது குறிப்பி டத்தக்கது. 5 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிகளின் நிர்வாகிகள் அரசிடம் முறையிட்டனர்.இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரத்தை அரசு நீட்டித்தது. இந்த கால நீட்டிப்பு மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, விதிமுறைகளைபூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை நீட்டித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, நிர்ண யிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலத்தில் அமைக்கப்படாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மாட்டோம் என்று அரசு உறுதியளித்தது.எனவே, மே 31-ம் தேதி அங்கீகாரம் முடிவடையும் 746 பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 5 லட்சம் மாணவர்கள், 25 ஆயிரம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி மெட்ரிகுலேஷன் பள்ளி கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் எஸ்.கே.வெங்கடாசல பாண் டியன் தமிழக அரசுக்கு வேண்டு கோள்விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்போது ஓராண்டுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ள பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்க வேண் டும். சிட்டிபாபு குழு பரிந்துரை களின் அடிப்படையில், மெட்ரிக் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இதர அம்சங்கள் தொடர் பாக தமிழக அரசு 2004-ல் ஓர் உத்தரவு பிறப்பித்தது. 

ஒரே இடத்தில் 6கிரவுண்டு நிலத்தில் பள்ளி அமைய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை யில் ஒரே இடத்தில் 6 கிரவுண்டுஇடம் கிடைப்பது கஷ்டமாக உள்ளது.சில இடங்களில் எங்களால் விலைக்கு வாங்க முடியவில்லை. இதனால், சில பள்ளிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஓர் இடத்திலும், பிரைமரி வகுப்புகளை சற்று தொலைவில் வேறு இடத்திலும் வைத்துள்ளனர். எனவே, இடம் தவிர்த்து மற்ற அனைத்து உள்கட்டமைப்பு களையும் சரிசெய்வதாக நாங்கள் ஒப்புக் கொண்டோம்.746 மெட்ரிக் பள்ளிகளுக்கு மே 31-ம் தேதி வரைதான் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் 5 லட்சம் மாணவர்கள், 25 ஆயிரம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கீகா ரத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், 2004-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக கல்வித்துறை வட்டாரத்தில் விசா ரித்தபோது, 746 மெட்ரிக் பள்ளி களுக்கு அங்கீகார நீட்டிப்பு விவகா ரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத் துள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு அடுத்த நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவந்தது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)