75GB அளவான 4G இன்டர்நெட் டேட்டா + 4500 நிமிட டாக் டைம் வெறும் 200 ரூபாக்கு

இந்தியாவில் பிரபல மொபைல் நெட்வொர்க் ஒன்றிடமிருந்து 75GB அளவான 4G இன்டர்நெட் டேட்டா + 4500 நிமிட டாக் டைம் வெறும் 200 ரூபாக்கு...
மக்களின் தேவையை புரிந்து கொண்டு இன்று சந்தைக்கு அறிமுகாமாகும் இணைய இணைப்புக்கள், பல்வேறு வசதிகளுடன் சிறந்த விலையில் கிடைக்க கூடியதாய் உள்ளது

2G இன்டர்நெட் பேக் ஒரு விலை, 4G இன்டர்நெட் பேக் ஒரு விலை என்று, ஒவ்வொரு இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தமது இடத்தை இன்டர்நெட் சந்தையில் தக்க வைக்க முயற்ச்சித்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் வெகு விரைவில் அறிமுகமாக இருக்கும், புதியதொரு இன்டர்நெட் பேக் பற்றிய செய்தி.

Reliance நிறுவனத்துக்கு சொந்தாமன Reliance Jio எனப்படும் 4G இன்டர்நெட் சேவையானது, மிகச்சிறந்ததொரு இன்டர்நெட் சலுகையை அறிமுகப்படுத்த உள்ளது.அதாவது 75 GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை வெறும் 200 ரூபாக்கு வழங்கவிருக்கிறது. இந்த சலுகையுடன் சேர்த்து 4500 நிமிட இலவச டாக் டைம்-ஐயும் வழங்கவிருக்கிறது. இந்த அனைத்து சலுகைகளும் செயற்படுத்திய நாளில் இருந்து 3 மாதங்கள் வரை செல்லுபடியாகும்.இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் வெளியான செய்தியை கீழே கீழே வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அனைத்து சலுகைகளும் பெரும்பாலும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கபடுகிறது.இணையத்தில் இதுவரை கசிந்துள்ள செய்திகளின் படி, Reliance டிஜிட்டல் ஸ்டோர்-களில் குறித்த 4G சிம்-ஐ வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான டாகுமென்ட்ஸ் தயாராக உள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவுறுத்தல் வெளியாகும் வரை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)