விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோரை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறை: உச்ச நீதிமன்றம் அனுமதி.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சாலை விபத்தில் சிக்கியர்வளுக்கு உதவும் நபர்கள், காவல்துறையினராலோ அல்லது பிற துறை அதிகாரிகளாலோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி. கோபாலா கௌடா, அருண் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு அனுமதி வழங்கியதோடு, இது குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.உரிய நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களை பாதுகாக்க நல்லெண்ணத்தோடு உதவும் நபர்கள், பிறகு வழக்கு விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தடுக்கும் என்றும், இதனால், விபத்தில் பல உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.