பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோக தேதிவெளியீடு

சென்னை: 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா கூறியுள்ளார்.

       60 மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் இந்தத் தகவலை உயர்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார்.ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.



பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைய உள்ள நிலையில், அவர்கள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை எவ்வித சிரமங்களும் இன்றி பெற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)