பி.எப்., பணத்தை எடுக்க புதிய நெறிமுறைகள்.


பி.எப்., எனப்­படும் தொழி­லாளர் வருங்கால வைப்பு நிதி­யி­லி­ருந்து பணத்தை எடுக்க, புதிய நெறி­மு­றைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இதன் படி, பணியில் இருந்து வில­கி­ய­வர்கள் தங்கள் முழுத்­தொ
­கை­யையும் எடுத்துக் கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.ஓய்வு கால திட்­ட­மான பி.எப்.,ல் ஊழியர்கள் தங்கள் ஊதி­யத்தில், 12 சத­வீதம் மாதந்­தோறும் செலுத்த வேண்டும். அதே அளவு தொகை, நிறு­வனம் சார்பில் செலுத்­தப்­படும்.


நிறு­வனம் செலுத்தும் தொகையில் ஒரு பங்கு, ஓய்வு நிதி திட்­ட­மான இ.பி.எஸ்.,ல் சேர்க்­கப்­படும்.பி.எப்., தொகையை, இடைப்­பட்ட காலத்தில் குறிப்­பிட்ட தேவை­க­ளுக்­காக மட்டும் தான் பகுதி அளவு எடுக்க முடியும். ஊழியர் வேலை­யி­லி­ருந்து விலகும்பட்­சத்தில், தொடர்ந்து இரண்டு மாதங்­க­ளுக்கு மேல் வேலையில் இல்­லாமல் இருந்தால், தன் கணக்கில் உள்ள முழுத்­தொ­கை­யையும் எடுத்துக் கொள்­ளலாம்; ஆனால் இதில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது.கடந்த பிப்­ர­வரி, 10ம் தேதி வெளி­யி­டப்­பட்­டுள்ள அறி­விக்கை படி, இரண்டு மாதங்­க­ளுக்கு மேல் ஊழி­யர்கள் வேலையில் இல்­லாமல் இருந்­தாலும் கூட முழுத் தொகை­யையும் எடுக்க முடி­யாது. அவர்கள் பங்­க­ளிப்பு மற்றும் அதற்­கான வட்டி மட்­டுமே பெற முடியும். நிறு­வனம் செலுத்­திய தொகை அவ­ரது கணக்­கி­லேயே நீடிக்கும். அவர், ஓய்வு பெறும் வயதில் தான் அந்த தொகையை பெற முடியும்.மேலும் பணம் எடுக்கும் வயது, 55லிருந்து, 58 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே இடைப்­பட்ட காலத்தில், வேலையில் இருந்து வில­கி­விட்டால் கூட முழுத்தொகை­யையும் எடுக்க முடி­யாது. ஆனால், திரு­மணம் அல்­லது குழந்தை பிறப்பு கார­ண­மாக பணியை விட்டுச் செல்லும் பெண் ஊழி­யர்­க­ளுக்கு இதி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும்.

பணி மாறும் நிலையில், பி.எப்., கணக்கை எளி­தாக தொடரும் வகையில் நிரந்­தர கணக்கு எண் வசதி அம­லுக்கு வந்­து­விட்­டதால், ஓய்வு காலம் வரை பி.எப்., பின் ஒரு பகு­தியை சேமிக்கும் வகையில், இந்த புதிய விதி­முறை கொண்டு வரப்­பட்­டுள்­ளது.எனினும் வேலையை விட்ட பின், புதிய வேலைக்கு சேராமல் இருப்­ப­வர்கள் விஷ­யத்தில் இது புதிய சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம். அவர்கள் கணக்கில் பணம் செலுத்­தப்­ப­டா­ததால், மூன்று ஆண்­டு­களில் இயங்­காத கணக்­காக கரு­தப்­பட்டு வட்டி நிறுத்­தப்­படும். இது தொடர்­பாக, அரசு தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)