கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்.
நாளை மறுநாள் நடைபெற உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு, மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் தேர்வெழுதும் வகையில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களின் பெயர் விவரம், பதிக்கப்பட்ட ஓ.எம்.ஆர்.,விடைத்தாள்கள், தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
விடைத்தாள்களை சேதமடையாமல், தேர்வெழுத வேண்டும்.
விடைத்தாளில் பெயர் மற்றும் பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விடைகளை குறிக்கும் கட்டங்களில் ஷேடு செய்ய, கருப்பு பால்பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கையொப்பம் இடும்போது, அதற்குரிய கட்டத்தை தாண்டி போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சேதமடைந்திருப்பின், மாற்று ஓ.எம்.ஆர்., விடைத்தாள் பெற்றுக்கொண்டு, தேர்வெழுதலாம்.