கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு பாராளுமன்ற குழு அறிக்கை
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்தி
ய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274–வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது.


அதில், கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ‘பல்கலைக்கழக மானிய குழுவின் மீதும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மீதும் சமீபத்தில் புகார்கள் வந்துள்ளன. அவை தீவிரமான புகார்கள் ஆகும். அவை தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேர்மையும், வெளிப்படையான தன்மையும் இந்த கணத்தில் தேவை. அவர்கள் பொறுப்பு கூற வைக்கப்படுவதோடு, வெளிப்படையானவையாகவும் இருக்க வேண்டும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆனால் அந்த பதிலில் பாராளுமன்ற குழு திருப்தி அடையவில்லை என தெரிய வந்துள்ளது.

தொலைதூர கல்வியை (அஞ்சல் வழி கல்வி) பொறுத்தமட்டில், பாரதீய தொலைதூர கல்வி மசோதா கொண்டு வரவேண்டும் என்று பாராளுமன்ற குழு அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank