தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வுஎப்போது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!மிக அருகில் வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது ஊதியக்குழு.


         'நடப்பு நிதியாண்டிலேயே (2016-17) ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்கம் செய்திட 1.02 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு, ரூ.70,000-யை கோடி பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்ற அறிவித்துவிட்டார்.


இது மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பு. மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஊதியக் குழு உயர்வு எப்போது?ஏன் ஊதியக் குழு?ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!'ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊழியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா?' என்றொரு கேள்வி எழக்கூடும்! அதற்கான பதில்:மாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு!இவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு!காலம் என்ன செய்கிறது?50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா? 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா? 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள்? 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம்? -இதுதான் காலமாற்றம்! இதற்காகத்தான் ஊதியக்குழு!ஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம்! நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே!ப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.கால அலகு (Periodicity)தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.ஊதியக்குழு அமலாக்க தேதிமுதலாவது ஊதியக்குழு - 01.06.1960 முதல்இரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்மூன்றாவது ஊதியக்குழு - 01.04.1978 முதல்நான்காவது ஊதியக்குழு - 01.10.1984 முதல்ஐந்தாவது ஊதியக்குழு - 01.06.1988 முதல்ஆறாவது ஊதியக்குழு - 01.01.2006 முதல்ஏழாவது ஊதியக்குழு - 01.01.2016 முதல்எதிர்பார்ப்பதுமேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல்முன்னும், பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊதியர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.குறைந்த பட்சம்: அதிக பட்சம்01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -
*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் அகவிலைப்படி) = 50 10 = 60*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-முதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -
* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் தர ஊதியம் அகவிலைப்படி 119%) = 4800 1300 7259 = 13,359
* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000 10000 91630 = ரூ.168630/-அதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிதுஅதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.பணப்பலன் (Monetary Benefit)!ஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன்5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு!

01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.முந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண்ணிக்கை 29.01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் தனி ஊதியம் அகவிலை ஊதியம் அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24 12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.இவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம். 


அதற்கான கணக்கீடு பின் வருமாறு:
* ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-
* இவரது ஊதிய ஏற்றமுறை (Pre Revised Scale of Pay) ரூ.5000 - 150 - 8000
* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-
* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)எல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக்குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.ஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறைஇந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1 0=1பெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000 GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010 2392 = 4402ஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.இந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊதிய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.நிலுவை (Arrears)!ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.இந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதிபொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.

முதன்முறையாக...!

பொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.ஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மைபதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.அவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு!
எந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. 

அவற்றுள் சில:
* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது
* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)