உங்களது முகம் அல்லது குரல் மூலம் ஆன்ராயிடு செயலிகளை லாக் செய்வது எப்படி?
இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான சிறந்ததொரு செயலியுடன் உங்களை சந்திக்கிறேன். எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் சாதாரணமாகவே நாம் ஏதேனும் ஒரு லாக்கர் செயலியை நிறுவி இருப்போம்.இதற்கு மிக முக்கிய காரணம், எமது ஸ்மார்ட் போனின் நாம் பல்வேறு வகையான தனிப்பட்ட விடயங்களை சேமித்து வைத்து இருப்போம்.
நாம் இல்லாத நேரத்திலோ அல்லது எமது ஸ்மார்ட் போன் வேறு யாருடைய கையிலாவது கிடக்கும் சந்தர்ப்பத்திலோ மற்றவர்கள் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் தனிப்பட்டவிடயங்களை பார்த்து விட கூடாது என்பதற்காகஏதேனும் ஒரு லாக்கர் செயலியை பயன்படுத்தி வருகிறோம்.
இப்படி நாம் எமது ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் லாக்கர் செயலியானது பெரும்பாலும் இலக்கம் அல்லது பேட்டர்ன் லாக் மூலமாகவே செயட்படுவதாய் இருக்கும்.பேட்டர்ன் லாக் அல்லது இலக்க கடவுச்சொல்லைடைப் செய்து அழுத்து போன உங்களுக்கு இன்றைய பதிவில் மிக அருமையான ஒரு லாக்கர் செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.அதாவது உங்களது போனில் நீங்கள் லாக் செய்திருக்கும் ஏதேனும் ஒரு செயலியை திறக்க வேண்டும் என்றால், போனின் முன்பக்க கேமரா மூலம் உங்களது முகத்தை காட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால், உங்களது குரலின் மூலம் அனலாக் செய்வதற்கான குறித்தவாசகத்தை கூற வேண்டும். இந்த இரண்டு அன்லாக் வழிகளும் தவிர, மூன்றவதாக (பாதுகாப்பு காரணங்களுக்காக) இலக்க கடவுச்சொல் அல்லது பேட்டர்ன் லாக் போன்றவற்றில் எதாவது ஒன்றையும் சேர்த்து செயற்படுத்தி கொள்ள முடியும்.
ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் இந்த அருமையான ஆன்ராயிடு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொள்ளுங்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். அடுத்து குறித்த செயலியில் வரும் அறிவுறுத்தல்களின் படி Start Enrollment என்பதை கிளிக் செய்து உங்களது போனின் முன்பக்க கேமரா மூலம் உங்களது முகத்தை லாக்க ர்-க்கான பாஸ்வேர்ட் ஆக செட்அப் செய்யுங்கள். அடுத்து குறித்த செயலியில் அறிவுருத்தப்பட்டிருக்கும் படி, குறித்த வாசகத்தை 3 முறை கூறி, உங்களது குரலை பதிவுசெய்யுங்கள். இதற்கு அடுத்தபடியாக தோன்றும் திரையில் பேட்டர்ன் லாக் அல்லது பாஸ்வோர்ட் ஒன்றி ன்மூலம் குறித்த செயலிக்கு நுழைவதற்கான பேக் அப் லொகின் முறையை உருவாக்கி கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் இந்த சிறப்பு லாக்கர் செயலியை மிகச்சரியாக செட்அப் செய்து முடித்து விட்டீர்கள். இப்போது உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளையும் இந்த சிறப்பு செயலியை பயன்படுத்தி உங்களதுமுகம் அல்லது குரலை வைத்து லாக் செய்ய முடியும்.இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் இருந்துஉங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.
இப்போது இந்த செயலின் மூலம் நீங்கள் லாக் செய்த ஏதேனும் ஒரு செயலியை உங்களது போனில் திறக்க முயற்சித்தால், மறுநொடியே உங்களது முகத்தை ஸ்கேன் செய்வதற்கான கேமரா திறக்கப்படும்.
இருள் சூழ்ந்த சந்தர்ப்பமொன்றில் ஏதேனும் ஒரு செயலியை அனலாக் செய்ய வேண்டுமென்றால், உங்களது குரலை பயன்படுத்தி அனலாக் செய்து கொள்ள முடியும். அல்லது ஏற்கனவே நீங்கள் பேக்அப் ஆக வழங்கிய பேட்டர்ன் லாக் அல்லது பாஸ்வேர்ட்-ஐ கூட பயன்படுத்த முடியும்.