மைக்ரோசாப்ட் வேர்டு எளிய தந்திரங்கள்.!!

மைக்ரோசாப்ட் வேர்டு புதிய அம்சத்திலா? நம்பவே முடியவில்லையே என்று நீங்கள் கூற முடியும். ஆனால் உண்மைதான். நீங்கள் முன்பு பார்த்த மைக்ரோசாப்ட் வேர்டு இப்பொழுது புதிய வடிவில் வந்துள்ளது. மைக்ரோசாப்ட்
ஆபீஸ் 365 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 பழைய வர்ஷனில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. இன்னும் சொல்ல போனால் ஆபீஸ் 2010இல் உள்ள அம்சங்களும் பழைய வர்ஷனை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016இல் சில தந்திரங்களை பயன்படுத்தினால் போதும் அதை எளிமையாக கையால முடியும்.


நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இன் புதிய வர்ஷனை பயன்படுத்தினால் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில எளிய தந்திரங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

Quick Styles பயன்பாடு

Word 2013இல் Quick Styles பயன்படுத்தி டாக்குமெண்டுகளை ஒழுங்குபடுத்த முடியும். இதை பயன்படுத்துவதால் தலைப்புகளுக்கு ஃபான்ட் மாற்ற வேண்டும் என்று இல்லை. இதன் மூலம் நீளமான கோப்புகளையும் விரைவில் சீரமைக்க முடியும்.

ஆபீஸ் கிலிப்போர்ட் ( Office Clipboard)

காப்பி மற்றும் பேஸ்டை பல முறை செய்வதற்கு ஆபீஸ் கிலிப்போர்ட் உதவுகின்றது. இதன் மூலம் 24 பல்வகை டெக்ஸ்ட் மற்றும் வரைகளை செய்திகளை ஒரு office டாக்குமெண்டில் இருந்து மற்றொன்றுக்கு விரைவில் பேஸ்ட் செய்ய முடியும்.

வடிவமைக்கும் கூறுகளை காண்பிக்க அல்லது மறைக்க

நீங்கள் செய்திகளை லேஅவுட் செய்யும் போது வடிவமைக்கும் கூறுகள் அதாவது formatting marks உங்களுக்கு அதிக அளவில் உதவுகின்றது. நீங்கள் செய்தியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் டிசைன் செய்ய இது உதவுகின்றது.

இலக்கணம் மற்றும் எழுத்துபிழை திருத்த

நீங்கள் டைப் செய்யும் செய்திகளில் உள்ள இலக்கண மற்றும் எழுத்துபிழைகளை திருத்த Spell Check and Grammar மிகுதியாக உதவுகின்றது. இதை உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். இதை உடனுக்குடன் நிகழ்த்தவும் முடியும். ஒரு டாக்குமெண்ட் முடிந்தவுடனே இதன் உதவியுடன் பிழைத்திறுத்தம் செய்து கொள்ள முடியும்.

Co-authoring a Word File

ஒரே ஃபைலில் இருவர் இணைந்து செயல்படுவது

நீங்களும் உங்களுடன் பணியாற்றுபவரும் இணைந்து டாக்குமெண்டை கையாள விரும்பினால் ஒவ்வொருவரின் தனி தனி செயலும் இதில் காட்டப்படும்.

ஆவணத்தை உடனுக்குடன் ஒப்பிட்டு பார்த்தல்

இரண்டு ஆவணங்களை ஒரே நேரத்தில் திறந்து ஒப்பிட்டு பார்க்க முடியும்.

கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்களை தனிப்பயனாக்கலாம்

கட்டளை, மேக்ரோ, ஃபான்ட், ஸ்டைல், அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் போன்றவைக்கு கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்கள் கொடுக்க முடியும். இதை வேண்டாம் என்றால் நீக்கவும் முடியும்.

வார்த்தை எண்ணிக்கை

உங்களுக்கு டைப் செய்த வார்த்தையின் எண்ணிக்கை வேண்டும் என்றால் எந்த நேரத்திலும் பார்க்க முடியும். Word windowவில் ஸ்டேடஸ் பாரில் கீழே பார்க்கவும்.

Quick Parts

Quick parts கேளரியை பயன்படுத்தி உருவாக்கம், ஸ்டோர் ஆட்டோ டெக்ஸ்ட், ஆவணங்களின் தன்மைகளான தலைப்பு, ஆசிரியர் மற்றும் ஆய்வு போன்றவற்றை பார்க்க முடியும்.

சமீபத்தில் பயன்படுத்திய கோப்புகள்

நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய கோப்புகளை தனிப்பயனாக்க முடியும். பல மைக்ரோசாப்ட் ஆபீஸ்'இல் நீங்கள் கடைசியாக பார்வையிட்ட பக்கங்களை உங்களுக்காக காட்டும். அதை வேகமாக நீங்கள் பார்வையிட முடியும். இது தானியங்கியாக நடைபெறுகின்றது. இதை நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவோ அல்லது கிலியர் செய்யவோ முடியும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)