Engineering Admission - Online Application Process Starts

 இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை,இனி 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.

           இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையில், காகித வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை முடிவுக்கு வருகிறது. இனி, 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.


தமிழகத்தில், இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, காகித வழி விண்ணப்ப நடைமுறை தான் அமலில் இருந்து வருகிறது. விண்ணப்பங்கள் வாங்க, மையங்களுக்கு மாணவர்கள் அலைய வேண்டும். அதன்பின், சமர்ப்பிப்பதிலும் பல சிக்கல்கள் இருந்தன. தற்போது, இந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.இனி, இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கும் நடைமுறை, இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தலைமையில், தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறித்து, உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில், இரண்டாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், விண்ணப்ப வினியோகம் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டு, தேதி முடிவானது.

பின், அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் அளித்த பேட்டி:இந்தாண்டு முதல், இன்ஜி., சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். சென்ற ஆண்டே, எம்.இ., மற்றும் பகுதிநேர, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆன்லைனில்விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.ஏப்., 15ம் தேதி முதல், மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அனைத்து விவரங்களும், அதிகாரபூர்வ அறிவிப்பில், ஆன்லைனில் வெளியாகும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதி, பின் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும், 60 மையங்களில், ஆன்லைன் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)