Flash News:மத்திய அரசு உழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அக விலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்
கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி, பிடிஐ செய்தி நிறுவனத் திடம் கூறியதாவது:
கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர் வோர் குறியீட்டு எண் 6.73 சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படை யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை விரைவில் அக விலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங் கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)