வேளாண் பட்டப்படிப்புக்கு மே 12 முதல் விண்ணப்பம்.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2016-17ம் கல்வியாண்டில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் மூலம் 13 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அறிவியல் பட்டப்படிப்பில் உறுப்பு கல்லூரிகளில் 915 இடங்கள், இணைப்பு கல்லூரிகளில் 1380 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் உறுப்பு கல்லூரிகளில் 305 இடங்கள் என மொத்தம் 2,600 இடங்க
ள் நிரப்பப்படுகின்றன. மாணவர்கள் இணையதள (ஆன்லைன்) விண்ணப்ப முறையில் விண்ணப்பிக்க வேண்டும். www.tnau.ac.in/admission.html என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் மே 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 11ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். தரவரிசை பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படுகிறது.

சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 27, 28ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி நடக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. ஆகஸ்டு 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படும். மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 31ம் தேதி நிறைவடைகிறது. இத்தகவலை பல்கலை. துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)