பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம்.
 2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்கள் படிப்புக்குப் பிறகு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

 கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
 ஆன்-லைனில் பதிவு: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் ஏப்ரல் 25 முதல் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய மே 9 கடைசித் தேதியாகும்.
 பின்னர் அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து "செயலர், பகுதி நேர பொறியியல் சேர்க்கை, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 641 014' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
 பதிவுக் கட்டணம்: விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணம் ரூ.300-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பதிவுக் கட்டணம் ரூ. 150 ஆகும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)