எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு

எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது. 


            சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரி களில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வின், 'கட் - ஆப்' மதிப்பெண்ணின் படி தான், முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

வரும் கல்வி ஆண்டுக்கான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் படிப்புக்கான, டான்செட் நுழைவுத்தேர்வு, ஜூன், 1லும், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புக்கு, ஜூன், 11லும் நடக்கிறது. 'இந்த தேர்வுக்கு, மே, 2 முதல் மே, 17 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)