விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்



விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனால் அங்குள்ள செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களால் குறைந்த விலைக்கு கருவிகளை உற்பத்தி செய்ய முடிகிறது.இதையடுத்து இந்தியாவில் 4-ஜி சேவையை விரிவுபடுத்துவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இதனால் வாடிக்கையாளர்களிடம் 4-ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு சந்தையை பிடிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்து வருகின்றன.

இந்த வாரத்தில் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிகாம் சலுகைகள் உள்பட ரூ.3,999க்கு 4-ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8 ஆயிரத்துக்கு சந்தையில்விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022