பி.இ. படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு

பி.இ. படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
 2016-17-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.


 இந்த முறை மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகத்தை ரத்து செய்யப்பட்டு, முதல்முறையாக இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கியது.
 முதல் நாளான ஏப்ரல் 15-ஆம் தேதி இணையதளம் முடங்கியதால், அன்று 5,424 பேர் மட்டுமே பதிவு செய்தனர்.
 அடுத்த நாளான ஏப்ரல் 16-இல் 23,186 பேரும், 17-ஆம் தேதி 12,561 பேரும், 18-இல் 19,930 பேர், 19-ஆம் தேதி 11,621 பேர் என 5 நாள்களில் மொத்தம் 72,722 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)