888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Docoss X1 ஸ்மார்ட் போன்.1GB RAM, 3G மற்றும் பல வசதிகள்.

சில மாதங்களுக்கு முன் Freedom 251 பற்றிய அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். நொய்டாவை சேர்ந்த ரிங்கிங்க் பெல் நிறுவனம் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் பெரிய அளவில் ஆர்டர் கலெக்ட் செய்து தற்போது காணாமல் போய் விட்டது.



இப்ப ஜெய்பூரை சேர்ந்த Docoss நிறுவனம் வெறும் 888 ரூபாய்க்கு சூப்பர் 3G ஸ்மார்ட்போனை வெளியீட இருக்கிறது. பொருளை பெற்றபின் பணத்தை கொடுத்தால் போதும் (COD - Cash on Delivery) என்கிறார்கள். இந்த மொபைலை வாங்கலாமா? மொபைலில் என்ன என்ன வசதிகள் இருக்கு, மொபைலை எப்படி ஆர்டர் செய்வது முழுவிவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.

மொபைல் பற்றி பார்ப்போம்:

இந்த மொபைல் 4" அங்குலம் (850 x 480 pixels) WVGA டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.2GHz dual-core Cortex A7 பிராசசருடன் இருக்கிறது,1GB RAM, 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 2 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash  உள்ளது மற்றும் .3 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர FM Radio, 3.5mm Head Phone, 3G,WiFi 802.11 b/g/n and Bluetooth, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 1300 mAh இருக்கிறது.

Docoss X1 Specs:
 4-inch (850 x 480 pixels) WVGA display
1.2GHz dual-core Cortex A7 processor
1GB RAM,
 4GB internal memory, expandable memory up to 32GB with microSDAndroid 4.4 (KitKat)
Dual SIM
2MP rear camera with LED flash
0.3MP front-facing camera

Dimensions: 122.2×64.4×9.3mm; Weight: 102g
3G,WiFi 802.11 b/g/n and Bluetooth, GPS1300mAh battery
Sensor: Accelerometer, Ambient Light Sensor

வெறும் 888 ரூபாய்க்கு இது ரொம்ப ரொம்ப அதிகம்தான். இதுவும் FREEDOM251 மொபைல் போல ஊழல்(SCAM)தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முன் கூட்டியே பணம் செலுத்த தேவை இல்லை என்பதால் பிரச்சனை இல்லை. COD மட்டும்தான்.

ஆர்டர் செய்வது எப்படி?

இந்த மொபைல் பூக்கிங்க் செய்ய இன்று (27.04.2016) முதல் 29.04.2016 வரை மாலை 6PM to 10PMக்குள் http://docoss.co/ தளத்தில் முன் பதிவு (Pre-Order) செய்ய வேண்டும். மே 2 முதல் ஆர்டர் செய்த அனைவருக்கும் மொபைல் டெலிவெரி செய்வார்களாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022