ஏ.ஐ.இ.இ.ஏ., நுழைவுத்தேர்வு.
இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சரல் ரிசர்ச் (ஐ.சி.ஏ.ஆர்.,) அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 2016ம் ஆண்டு மாணவர்சேர்க்கைக்கான, நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி.,
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
இளநிலை பட்டப்படிப்பு:பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்.டி., மற்றும் எஸ்.சி., பிரிவு மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.வயது வரம்பு: 16 வயதுக்கு மேல்.
முதுநிலை பட்டப்படிப்பு:60 சதவீத மதிப்பெண்களுடன், விவசாயம், கால்நடை, வேளாண் பொறியியல், மீன்வளர்ப்பு, தோட்டக்கலை , ஹோம் சயின்ஸ், பட்டுப்புழு வளர்ப்பு, பால் தொழில்நுட்பம், வனவியல், உணவு அறிவியல், பயோடெக்னாலஜி மற்றும் அடிப்படை அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு:19 வயதுக்கு மேல்பிஎச்.டி., பட்டப்படிப்பு:60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி., மற்றும் எஸ்.சி., பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:30க்குள்
விண்ணப்பிக்க கடைசி நாள்:ஏப்ரல் 30.
மேலும் விவரங்களுக்கு: www.icarexam.net