சாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இவற்றில் எதைப் படிக்கலாம்

சாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இவற்றில் எதைப் படித்தால் சிறப்பான வேலையைப் பெறலாம்?
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் சாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இரண்டுக்குமே நல்ல வாய்ப்புகள் கிடைப்பதைப் பார்க்கிறோம். இந்தியாவில் கம்ப்யூட்டர்களும் அதன் உதிரிப்பாகங்களும் அதிக அளவில் தேவை
ப்படுவதைக் காண்கிறோம். மக்கள் தொகை அதிகமுள்ள நாடு என்பதாலும் இன்றைய உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை என்பதாலும் இவற்றுக்கான தேவை எப்போதுமே அதிகரித்து வரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து வருவதால் நெட்வொர்க்கிங் துறை பசுமையான வாய்ப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. பிராட்பேண்ட், ஹைடெக் வீடியோ கான்பரன்சிங், வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோடோகால் போன்ற சேவைகள் பெருகி வருகின்றன என்பதால் நெட்வொர்க்கிங் துறையானது திறனாளர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவை மிக வேகமாக விரிந்து வளர்ந்து வருகின்றன. எனவே சிறப்பான கம்ப்யூட்டர் திறன் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களது திறனுக்கேற்ப நெட்வொர்க்கிங் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் ஆகிய 2 பிரிவுகளிலுமே வாய்ப்புகள் எண்ணற்று கிடைக்கின்றன. சிஸ்கோ சர்டிபைட் நெட்வொர்க் அசோசியேட்டிலிருந்து நெட்வொர்க்கிங் தகுதியைப் பெறுவது உங்களுக்கு மிகவும் உதவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank