இந்தியர்களை பெருமை கொள்ள செய்த இஸ்ரோவின் சாதனைகள்!

உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தையும், பெருமையையும் பன்மடங்கு உயரச் செய்வதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்[இஸ்ரோ] பங்கு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது

. இந்தியர்கள் பெருமை கொள்ளத்தக்க பல்வேறு சாதனைகளை இஸ்ரோ தொடர்ந்து படைத்து வருகிறது.
                 இந்த நிலையில், அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை போன்று, ஐஆர்என்எஸ்எஸ் என்ற பெயரில் புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை இஸ்ரோ அறிமுகம் செய்ய இருப்பது குறித்து சமீபத்தில் விரிவான செய்தித்
தொகுப்பை வழங்கியிருந்தோம். இந்த நிலையில், பல சாதனைகளை இஸ்ரோ தொடர்ந்து படைத்து வந்தாலும், அதில் இந்தியர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளக்கூடிய சில முக்கியமான சாதனைகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் க்ளிக் / ஸ்வைப் செய்து படிக்கலாம்.

1/12
மங்கள்யான்
இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வல்லமையை உலக அரங்கில் பல மடங்கு உயர்த்தியதற்கு மங்கள்யான் திட்டம் முக்கியமானது. பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த மங்கள்யான் திட்டம் மூலமாக செவ்வாய்க்கு ராக்கெட்டை செலுத்தி புதிய சாதனையை படைத்தது. இதை பார்த்து உலகமே வாய் பிளந்து நின்றது. மேலும், மங்கள்யானை வெற்றிகரமாக செலுத்தியதுடன், செவ்வாய் குறித்த ஆய்வுக்கு வலு சேர்க்கும் விதத்தில் துல்லியமான புகைப்படங்களை அனுப்பியும் இந்தியர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
2/12
ராக்கெட் நுட்பம்
அமெரிக்காவே அலறும் அளவுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதிக எடையை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பிஎஸ்எல்வி-சி28 ராக்கெட்டில் வைத்து, 1440 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட இங்கிலாந்து நாட்டின் 5 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபரில் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட்டில் வைத்து 6 சிங்கப்பூர் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. இதைத்தொடர்ந்து, ஒரே நேரத்தில் 22 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை விரைவில் செய்ய உள்ளது இஸ்ரோ.
3/12
ஜிஎஸ்எல்வி எம்கே3
விண்வெளி வீரர்களை வைத்து அனுப்பும் வசதி கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டையும் சமீபத்தில் வெற்றிகரமாக இஸ்ரோ சோதனை செய்துள்ளது. இதன்மூலமாக, விண்வெளி ஆய்வு துறையில் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்ட இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியர்களின் பெருமையை மேலும் உயர்த்துவதற்கு இஸ்ரோ மேற்கொண்டிருக்கும் சில அட்டகாசமான திட்டங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
4/12
விண்கலம்
அமெரிக்கா போன்று, விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு இருக்கிறது. இது மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ராக்கெட் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் கனவு திட்டம். இதற்காக, Reusable Launch Vehicle[RLV] விண்கலத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது ராக்கெட்டின் மீது வைத்து பொருத்தி விண்வெளிக்கு செலுத்தப்படும். விண்வெளியில் 70 கிமீ உயரத்திற்கு ராக்கெட் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் வங்காள விரிகுடாவில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, 2 கிமீ ஓடுபாதையில் தரையிறக்கி சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
5/12
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம்
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பம் திட்டத்தையும் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 18ந் தேதி இதற்காக ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டில், மனிதர்கள் செல்வதற்கான மோடியூலை வைத்து செலுத்தியது. 80 கிமீ உயரத்தை தொட்ட பின்னர், வெற்றிகரமாக ராட்சத பாரசூட்டுகள் மூலமாக கடலில் தரையிறக்கப்பட்டது.
6/12
அடுத்த கட்டம்
மூன்று விண்வெளி வீரர்களுடன் முதல் விண்கலத்தை 2021ம் ஆண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. விண்வெளி வீரர்களை தேர்வு செய்வது, பயிற்சியளிக்கும் பணிகளை இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதை வெற்றிகரமாக மேற்கொள்ளுபட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank