காற்றாலை கைகொடுத்தால் மட்டுமே மே மாதம் தப்பமுடியும் !!!
கடும் வெயில்காரணமாக தமிழகத்தின் தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தொட்டுள்ளது. காற்றாலை மின்சாரம்
கைகொடுத்தால் மட்டுமே மே மாத மின்
தேவையை சமாளிக்க முடியும்.கடந்த 15 மாலை தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து, 969 மெகாவாட்டாகஅதிகரித்து புதிய வரலாறு படைத்தது.
அதே அளவிற்கு மின் உற்பத்தியும் மின்கொள்முதலும் இருந்த தால் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.
ஆனால் வானிலை ஆய்வுமையம் நேற்று முன்தினம் சொன்னதுபோல் நேற்று வெப்பம் அதிகரித்தது; இன்றும் அதிகரித்தே காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் இன்னும் சில தினங்களில் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து எரிசக்தி துறை அதிகாரிஒருவர் கூறியதாவது:தற்போது மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின் உற்பத்தி, மின் கொள்முதல் உள்ளது. ஆனால் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய காற்றாலை மின்சாரம் அவசியம்.
எனவே சீசன் துவங்கியதும் காற்றாலை மின்சாரம் கைகொடுத்தால் மட்டும் தான் மே மாத வெயில் காலத்தில் மின் தேவையையும் சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.